Gas Cylinder Price: அதிர்ச்சி அளிக்கும் கேஸ் சிலிண்டர் விலை.... வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்வு...
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, ரூ.12.50 அதிகரித்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4.50 குறைக்கப்பட்டு, ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி மாதம் முதல் நாளான இன்று கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.12.50 அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,937ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.

image