சினிமாவில் இருந்து விலகும் விஜய்.. இந்த படம் தான் கடைசி படமா?நடிகர் விஜய் தொடங்க உள்ள கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகராக இருந்து அரசியலில் குதித்த பல தலைவர்கள் வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் இணைந்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு நல பணிகள் செய்து வந்த அவர், தற்போது முழு நேரமாக அரசியலில் குதித்துள்ளார். முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் வருடத்திற்கு ஒரு படம் நடித்து ஹிட் கொடுத்துவருகிறார். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளனர்.
தலைவா படத்திற்கு பிறகு இவரது படத்தில் அரசியல் வசனங்கள் அதிகம் இடம்பெற தொடங்கிவிட்டன. தொடர்ந்து அனைத்து படத்தின் ஆடியோ லாஞ்சிலும் அரசியல் கருத்துக்கள் பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார். சமீபத்தில் லியோ பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், கப்பு முக்கியம் பிகிலு என கூறி அரசியல் ஹிண்ட் கொடுத்திருந்தார். தொடர்ந்து இன்று அரசியலில் குதித்து கட்சியின் பெயரை அறிவித்தார்.

தற்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஒரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும், அதன்படி தன்னுடைய 69தாவது படத்துடன் சினிமாவுக்கு விஜய் முழுக்கு போடுவார் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால், அதுவே நாம் விஜய்யை சினிமாவில் பார்க்கும் கடைசி படமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.