பிரிட்டனை அலறவிடும் "எரிஸ்" கொரோனா.. ரொம்பவே வேகமாக பரவுகிறதாம்! வேக்சின் நம்மை பாதுகாக்குமா! டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து நாம் முழுமையாக மீண்டதாக நினைத்தால் இப்போது மீண்டும் புதிய வகை கொரோனா பரவுவது பொதுமக்களிடையே பகீர் கிளப்புவதாக இருக்கிறது.இப்போது தான் நாம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளோம். கொரோனா வேக்சின் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவை நாம் வென்றுள்ளோம். கொரோனா: கொரோனா பிரச்சினைகள் ஓய்ந்தது என நாம் இப்போது நினைக்கும் நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது. இந்த முறை எரிஸ் என்ற வகை கொரோனா வேரியண்ட் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இது இப்போது பிரிட்டன் நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அண்டை ஐரோப்பிய நாடுகளும் கவலையடைந்துள்ளன. இந்த எரிஸ் வகை கொரோனா என்ற மற்றொரு அலையை ஏற்படுத்துமோ என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர் .இந்த புதிய எரிஸ் கொரோனா எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இது கொரோனா தடுப்பூசிகளுக்குக் கட்டுப்படுமா என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். எரிஸ் வேரிண்யட்: எரிஸ் கொரோனா கடந்த ஜூலை மாதம் முதலில் கண்டறியப்பட்டாலும் கூட இப்போது தான் அது தீவிரமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. இப்போது பிரிட்டன் நாட்டில் கண்டறியப்படும் 7 கேஸ்களில் ஒன்று எரிஸ் கொரோனாவாக இருக்கிறது. பிரிட்டன் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது பல இடங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பின்னரே இதற்கு எரிஸ் எனப் பெயரிடப்பட்டது. இந்தியாவில் வேக்சின் எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் இது நமக்குத் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். முன்னெச்சரிக்கை: இருப்பினும், நாம் சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்... வேக்சின் போடவில்லை என்றால் முதல் வேலையாக வேக்சினை எடுத்துக் கொள்ளுங்கள்.. வேக்சின் மட்டுமே தீவிர பாதிப்பில் இருந்து நம்மை காக்கும். உடல்நிலை சரியில்லாமல் யாராவது இருந்தால். அவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் விலகி இருங்கள். கூட்டமான இடங்களைத் தவிர்க்கலாம். வெளியே செல்லும் போது சரியான முறையில் மாஸ்க் அணியுங்கள்.. உங்கள் கைகளைச் சோப்பு போட்டு கழுவுங்கள்.. அல்லது ஆல்கஹால் உள்ள சானிடைசரை பயன்படுத்துங்கள். இருமல் அல்லது தும்பல் வந்தால் வாயையும் மூக்கையும் கர்ச்சீப் மூலம் மூடுங்கள்... கொரோனா அறிகுறி எதாவது தென்பட்டால் உடனடியாக கொரோனா டெஸ்டிங் எடுத்து, முடிவுகள் வரும் வரை தனிப்மைபடுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் பொதுவான மருத்துவ டிப்ஸ் தான்.. உடலில் எதாவது அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைச் சந்திக்கவும்.

