TODAY HEALTH TIPS 😊
வடித்த அரிசி கஞ்சியின் அற்புத பலன்கள்.
சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்போம்.
சாதம் வடித்து சாப்பிடும் முறையை நாம் இன்றைய காலத்தில் மறந்துவிட்டனர். சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் உடலுக்கு நல்லது
1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.
2.சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.
3. வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
4. ஆய்வுகளில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஞாபக மறதியைத் தடுக்கும் என்று நிரூபிக்கப்படாவிட்டாலும், ஒருசில செய்திகள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீருக்கு ஞாபக மறதியைத் தடுக்கும் திறன் உள்ளதாக சொல்கிறது. இதனால் தான் நம் தாத்தா, பாட்டியின் ஞாபக சக்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில்
5.அரிசி கஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இதனை பயன்படுத்தி ரசம் வைத்து சாப்பிடலாம். காய்கறிகள், பருப்புகளை அதில் வேகவும் வைக்கலாம். இட்லி மாவை அரைக்கும்போது இதனை கொஞ்சம் சேர்த்தால் இட்லி மிருதுவாக இருக்கும்.
6.உடல் சுருசுருப்பாக இயங்கவும் உதவுகிறது. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும்.
7.மேலும், சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
8.சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். எனவே சாதம் வடித்த கஞ்சியை முடிந்த அளவு வாரத்தில் 4 நாட்களாவது பருகி வாருங்கள்.