Beauty tips 3:
முகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள்..!
Whitening Face Tips Homemade: ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் சருமம் வெள்ளையாக ஒரு சூப்பர் டிப்ஸ் பார்க்க போறோம். இன்றைய காலத்தில் பெண்கள் அனைவருமே முகத்திற்கு செயற்கையான கிரீம் வகைகளை பயன்படுத்தி முகத்தை வீணடித்து கொண்டு இருக்கின்றார்கள்.
அதை எல்லாம் தவிர்த்து விட்டு இப்போது இயற்கையான முறையில் முக அழகை எப்படி பாதுகாக்கலாம் என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
முகம் வெள்ளையாக மாற – தேவையான பொருட்கள்:
1.சீரகம் – 1 ஸ்பூன்
2.கஸ்தூரி மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
3.கடலை மாவு – 1 ஸ்பூன்
4.எலுமிச்சை சாறு – தேவையான அளவு .
முகம் பளிச்சென்று இருக்க செய்முறை விளக்கம்
Whitening Face Tips Homemade:
1. முதலில் சீரகம் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். ஜீரகம் முகத்தில் உள்ள சுருக்கம், கோடுகள் போன்றவற்றை போக்கும். சருமத்தை வெள்ளையாக மாற்றும் தன்மை சீரகத்திற்கு அதிகமாவே உள்ளது.
2. முகம் சிவப்பழகு பெற செய்முறை விளக்கம் 2:
Whitening Face Tips: அடுத்து கஸ்தூரி மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சீரகத்தோடு சேர்த்து எடுத்து கொள்ளவேண்டும்.
பின் கடலை மாவு 1 ஸ்பூன் எடுத்து கொள்ளவும். அதன் பிறகு தேவையான அளவிற்கு எலுமிச்சை சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் சேர்த்த பிறகு மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.தேவைப்பட்டால் இதனுடன் சிறிதளவு பால் கூட சேர்த்து அரைத்து கொள்ளலாம். இந்த ரெடி பண்ண பேஸ்டை உங்க கழுத்தில், முகத்தில், கைகளில் எங்கெல்லாம் சுருக்கம் காணப்படுகிறதோ அங்கே இதை தடவ வேண்டும்.
சீரகத்திற்கு முகம் நல்லா வெள்ளையாக மாற்றும் தன்மை கொண்டது. எனவே இந்த ஃபேஷ் பேக் முகத்தை நன்றாக வெள்ளையாக மாற்றும்.
இந்த ஃபேஷ் பேக் போடுவதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் இதெல்லாம் குறையும். அதோடு உங்கள் வயதை குறைத்து உங்களை இளமையாக காட்டும்.
இதில் சேர்த்த கஸ்தூரி மஞ்சளுக்கு சருமத்தை இளமையாக மாற்றும் தன்மை உடையது.
இதை 10 நிமிடம் நன்றாக தடவி வைத்துவிட்டு பிறகு வாஷ் செய்துகொள்ளலாம்.
இதை ஆண்கள் பெண்கள் என இருபாலரும் செய்யலாம். ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் மட்டும் தவிர்த்து விட்டு மீதமுள்ள அனைத்து பொருளையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
இதை தொடர்ந்து 3 நாள் செய்து வந்தால் கண்டிப்பா உங்க முகம் வெள்ளையாக மாறும்.