சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை சிரமம் இன்றி பயணிக்கலாம்.. வெளியான அறிவிப்பு!
நாளை பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை.
வார இறுதி நாட்கள் என்றாலே, சென்னைவாசிகளின் பயணங்கள் அதிக அளவில் நடைபெறும். அந்தவகையில், தற்போது விடுமுறை என்பதுடன், தெற்கு ரயில்வேயின் சேவையும் இல்லாத பட்சத்தில், சென்னைவாசிகள் மேலும் திணறிவிடக்கூடும்.

அதனால்தான், தமிழக போக்குவரத்து துறை ஓடோடி வந்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது, பயணிகளுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.

தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.அந்தவகையில், இன்று இரவு 11.45 மணி முதல் 22-ம் தேதி வரை சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.