செங்கல்பட்டை குளிர்வித்த திடீர் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி!செங்கல்பட்டில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அந்த வகையில செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவில் மழை பெய்து வருகிறது.
காலை முதலே வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் தற்போது இரவு நேரத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு புறநகர் பகுதி, புலிப்பாக்கம், படாளம், அனுமந்த புத்தேரி, ராமப்பாளையம், பாலூர், மேம்பாக்கம், சாஸ்திரம்பாக்கம், காட்டூர், கலிவந்தப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் பெய்து வரும் சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சுழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.