தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறை தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
