ஏன் சென்னையில் திடீர் கனமழை?

சில நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக இந்த காலகட்டத்தில் மழை பெய்யும். அப்படி பெய்தாலும் சிறிது நேரம் பெய்து ஓய்ந்துவிடும். ஆனால் நேற்று இரவு முதல் தொடச்சியாக மழை பெய்து வருவது ஏன் என்று வானிலை ஆய்வாளர்கள் மத்தியில் கேட்டோம்.
தெற்கு வங்க கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவானது. அங்கிருந்து வடகிழக்கு திசையில் காற்று வீசத் தொடங்கியது. இதனால் மேகக்கூட்டங்கள் நகர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் மழையை கொடுத்துள்ளது.
நேற்று முன் தினம் வரை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தது.