Exclusive : தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை - அமைச்சர் தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு இல்லை என நியூஸ் 18க்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்த போராட்ட இன்று தொடங்கிய நிலையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில 80 சதவீத பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதாக போக்குவரத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்இதேப்போன்று மற்ற மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன்
சீருடையில் அணியாமல் பேருந்துகளை இயக்கும் பஸ்களை மறித்து போக்குவரத்து ஊழியர்கள் தர்ணா செய்து வருவதால் சில இடங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிகாலை பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள், பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்தை இயக்க முயன்றவர்களுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகரில் 94% நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் 50% பேருந்துகள் தற்காலிக பணியாளர்கள் மூலம் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

image