வெள்ளத்தில் சிக்கிய 2,000 மாணவர்கள்... பஞ்சாபில் ஓடிவந்த ராணுவம்... வரும் 16ஆம் தேதி வரை விடுமுறை!
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிட்காரா பல்கலைக்கழகத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சுமார் 2,000 மாணவர்கள் சிக்கி கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்க இந்திய ராணுவம் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டன
ஜம்மு காஷ்மீர், லடாக், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 28 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
