10 நிமிடம்.. ஒரு ஆம்லெட்டை சாப்பிட்டால் 50,000 ரூபாய் பரிசு! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
டெல்லி அருகே உள்ள குர்கான் செக்டார் 22 பகுதியில் இந்த விசித்திரமான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தயார் செய்யப்படும் இந்த ஆம்லெட் விலை ரூ.440
ஆம்லெட், ஆஃபாயில் போன்றவற்றை சாப்பிடுவதெல்லாம் நிச்சயமாக ஒரு கலை என்றுதான் குறிப்பிட வேண்டும். சிலர் சிறு, சிறு துண்டுகளாக பிய்த்து ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்கள் பலர் உண்டு. இன்னும் சிலர் வாரிசுருட்டி லாவகமாக ஒரே வாயில் அடக்கி சாப்பிட்டு விடுவார்கள்.

எப்படி சாப்பிட்டாலும் அதன் ருசியில் ஓரிரு நொடிகளுக்கு நாம் நம்மையே மறந்து விடுவோம். இப்படி நமக்கு பிடித்தமானதாக இருக்கின்ற ஆம்லெட் ஒன்றை 10 நிமிடத்தில் சாப்பிடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு என்று சொன்னால் நாம் விட்டு விடுவோமா என்ன!டெல்லி அருகே உள்ள குர்கான் செக்டார் 22 பகுதியில் இந்த விசித்திரமான போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தயார் செய்யப்படும் இந்த ஆம்லெட் விலை ரூ.440 ஆகும். என்னது, ஒரு ஆம்லெட் இருக்கு இவ்வளவு விலையா என்று நாம் ஆச்சரியம் அடைந்தோம் என்றால், அது தயார் செய்யப்பட்ட விதம் உங்களுக்கு இன்னும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும்.

இந்த மெகா சைஸ் ஆம்லெட் எப்படி தயார் செய்யப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால், நிச்சயமாக இந்த போட்டியில் நாம் பங்கேற்க விரும்ப மாட்டோம். முதலில் ஒரு பெரிய கடாய் சூடேற்றி அதில் வெண்ணெய் சேர்த்து உருகியவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துருவல் போன்றவற்றை சேர்த்து இந்த நபர் துரிதமாக வதக்கிக் கொண்டிருக்கிறார்.அதேசமயம் மற்றொரு பாத்திரத்தில் 10, 12 முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறப்பு மிக்க மசாலா, உப்பு போன்றவற்றை சேர்த்து கலக்கிக் கொண்டார். ஏற்கனவே வதக்கிய காய்கறி கலவையின் மீது முட்டைகள் முழுவதுமாக ஊற்றி விட்டார்.

மேலும் முட்டையின் மீது 4 பிரெட்டுகளை அடுக்கி அது வெந்ததும் லாவகமாக திருப்பி போட்டு அதை 4 துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்டார். மெகா சைஸ் ஆம்லெட் கதை இதோடு நிற்கவில்லை.
ஆம்லெட் மீது கொத்தமல்லி இலை, எலுமிச்சை சாறு, வெண்ணெய் துருவல், சாஸ், பன்னீர், ஃப்ரெஷ் க்ரீம், மயோனைஸ், கெட்சப், பீட்ரூட் துருவல் என்று மலை மலையாக அடுக்கி பிரம்மாண்ட ஆம்லெட் போல மாற்றி விட்டார்.

image