குடியரசு தினத்தில் தேசியக் கொடியை ஏற்ற மாட்டார்கள்.. பறக்கவிடுவார்கள்.. என்ன வித்தியாசம்? இதுதான் காரணம்..!
குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் தேசிய கொடி பறக்கவிடப்படும். ஆனால் கொடி ஏற்றப்படாது. இதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.இந்தியாவின் முக்கிய அங்கமாக திகழும் தேசியக்கொடியை குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் பறக்கவிடுவார். நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது போல், குடியரசுதினமும் கொண்டாடப்படுகிறது.
இரண்டு நாட்களிலும் தேசிய கொடி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஆனால் இரண்டு நாட்களிலும் மேற்கொள்ளப்படும் வழிமுறைகள் வேறுபடும். குடியரசு தினத்தில் தேசிய கொடி ஏற்றப்படுவது இல்லை. அதற்கு பதிலாக தேசிய கொடி விரிக்கப்படும். இதன்பின் இருக்கும் வரலாறு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தேசியக் கொடியை பிரதமர் ஏற்றுவது வழக்கம். ஆனால் குடியரசு தினத்தன்று (ஜனவரி 26) கொடி ஏற்றும் வழக்கம் கிடையாது. மாறாக ஏற்றிய கொடியை அவிழித்து பறக்க விடுவதுதான் வழக்கம்.

அதாவது நாடு ஏற்கெனவே விடுதலைப் பெற்று விட்டது, இப்போது குடியரசு என்பதை அறிவிப்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி. இதில் இன்னொரு வித்தியாசம் என்னவெனில், சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் கொடியை ஏற்றி நாட்டுமக்களுக்காக உரையாற்றுவார்.
ஆனால் குடியரசு தினத்தன்று நாட்டின் முதற்குடிமகனான குடியரசுத்தலைவர்தான் கொடியை அவிழ்த்து அதைப் பறக்க விடும் செய்கையை மேற்கொள்வார். ஏனெனில் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தின் தலைவர் குடியரசுத் தலைவரே.

image