தமிழகத்தில் அரிசி விலை கிடுகிடு உயர்வு – கிலோவுக்கு எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் 10 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.80 வரை உயர்ந்துள்ளது.இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உட்பட தென்மாநிலங்களின் முதன்மையான உணவுப்பொருளாக இருப்பது அரிசி. தற்போது இதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக கருதப்படும் தஞ்சையில், ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல், ஆந்திரா பொன்னி, பிரியாணி அரிசிகளின் விலையும் அதிகரித்துள்ளது. குறைவான சாகுபடி, வெளிமாநில வியாபாரிகளின் அதிகளவில் கொள்முதல் செய்வது போன்ற காரணங்களால் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரிசி ஆலைகள் அதிகமுள்ள திருவள்ளூர் மாவட்டத்திலும் 26 கிலோ சிப்பம் ரூ.100 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ளது.
இதே போன்று, தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் அரிசியின் விலை அதிகரித்துள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசு, ஒரு கிலோ நெல்லை ரூ.21-க்கு கொள்முதல் செய்வதால், அதை விட கூடுதல் விலைக்கே தனியார் அரிசி ஆலைகள் கொள்முதல் செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதுவும் அரிசி விலையின் உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

image