கரும்பு, கருமஞ்சள், கங்குன் கீரை... மாடித்தோட்டத்தில் அசத்தும் புஷ்பவனம் குப்புசாமி-அனிதா தம்பதி!
புஷ்பவனம் குப்புசாமி - அனிதா குப்புசாமி தம்பதி, கிராமிய இசைக்கு மட்டுமல்ல, மாடித்தோட்ட விவசாயத்துக்கும் பெயர் பெற்றவர்கள். இசைக் கச்சேரி மற்றும் திரைப்படத்துறையிலும் புகழ்பெற்ற பாடகர் களாகப் பரபரப்புடன் இயங்கும் இவர்கள், இயற்கையின் மீது கொண்ட நேசத்தால், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத் திலுள்ள தங்கள் வீட்டு மொட்டைமாடியில் தோட்டம் அமைத்துச் சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். ஏற்கெனவே பல ஆண்டுகளாக இருந்து வந்த தோட்டத் தைக் கூடுதல் பரப்பில் விரிவுபடுத்தி, பல மாற்றங்களைச் செய்துள்ளனர். இங்கு பசுமையாகக் காட்சி அளிக்கும் பலவிதமான செடி கொடிகள் நம் கண்களுக்கும் மனதுக்கும் புத்துணர்வு தருகின்றன. தங்கள் வீட்டுச் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் காய்கறிகள், கீரை வகைகள் மட்டுமல்லாமல்... பழங்கள், மூலிகைகள், பூக்கள் ஆகியவற்றையும் மிகுந்த முனைப்போடு பயிர் செய்து வருகிறார்கள்.
