தினமும் முளைகட்டிய பயறு சாப்பிடுவது நல்லதா? எந்த அளவு மட்டும் எடுக்கணும்..

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதன் மூலம் நம்முடைய உடலில் நிறைய ஆரோக்கிய மாற்றங்கள் ஏற்படும். அதேசமயம் அவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரல் பாதிக்கும். அஜீரணக் கோளாறு ஏற்படும். தினமும் அவற்றை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. உண்மையிலேயே முளைகட்டிய பயறை தினமும் சாப்பிடலாமா, அப்படி தினமும ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டால் என்ன ஆகும் என்பது பற்றி தான் இந்த பகுதியில் விரிவாகத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முளைகட்டிய பயறு வகைகளை உயிர்ச்சத்துள்ள உணவுகள் என்று இயற்கை மருத்துவத்தில் குறிப்பிடுவார்கள். அதாவது உணவு, சூப்பர் உணவு, உயிரோட்டமுள்ள உணவு என்று வகைப்படுத்துவார்கள். அதில் முளைகட்டிய தானியங்களை மூன்றாவது வகையில் அடக்குகிறார்கள்.அதற்குக் காரணம் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே முழுமையாக நமக்கு கிடைக்கும் என்பதால் தான். ஆனால் அவற்றை சரியான முறையில் சாப்பிடுவதும் முக்கியம்.முளைகட்டிய பயறு வகைகளில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன.

இவை குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவி செய்யும்.

குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதன் மூலம் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும். நோயெதிர்ப்பு மண்டலமும் பலப்படும்.

முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் உள்ள ஸ்டார்ச் மற்றும் புரதங்களை உடைப்பது மிக எளிது. அதனால் ஜீரணமும் எளிாகும்.

​ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்

முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகளை தினமும் எடுத்துக் கொள்ளும்போது நீரிழிவு நோயாளிகள் மற்றும் ப்ரீ - டயாபடீஸ் உள்ளவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவி செய்வதாக பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையை மிக மெதுவாகவே வெளியிடுகிறது. அதோடு கார்போஹைட்ரேட்டை உடைத்து சர்க்கரையாக (குளுக்கோஸ்) மாற்றும் என்சைம்களின் செயல்பாட்டைக் குறைக்கிற சேர்மங்கள் முளைகட்டிய பயறுகளில் இருக்கின்றன. அதனால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள்ளேயே இருக்கும்.

​இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

முளைகட்டிய பயறு வகைகளை தினமும் எடுத்துக் கொள்ளும்போது ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவைக் கட்டுக்குள் வைப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

முளைகட்டிய பயறு வகைகள் கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து எச்டிஎல் கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்கிறது.

இவற்றில் உள்ள டை்டோகெமிக்கல்கள் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தச் செய்கிறது.

​எந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?

முளைகட்டிய பயறு, தானியங்கள் தினமும் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. தான். அதேசமயம் அதை எந்த அளவில் எடுத்துக் கொள்கிறோம் என்பது மிக முக்கியம். எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான். அதனால் அளவோடு எடுக்க வேண்டும்.

முளைகட்டிய பயறுகள் வகைகள் மற்றும் பட்டாணி - ஒரு நாளைக்கு அரை கப் (சிறிய கப்) அல்லது 1 கைப்பிடி அளவு,

முளைகட்டிய நட்ஸ் மற்றும் விதைகள் - கால் கப் அல்லது அரை கைப்பிடி அளவு,

முளைகட்டிய தானியங்கள் - கால் கப் அல்லது அரை கைப்பிடியளவு

image