Vishnu and Shiva Lingam in Krishna river | கிருஷ்ணா நதியில் விஷ்ணு, சிவலிங்கம் | Dinamalar
கர்நாடகாவின் ராய்ச்சூர் - தெலுங்கானா மாநிலத்தின் இடையே கிருஷ்ணா நதி ஓடுகிறது. இவ்விரு மாநிலங்களுக்கு இடையே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது, நதியில் விஷ்ணு, சிவலிங்கம் கிடைத்தது. இது தொடர்பாக, அதிகாரிகளுக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்து.
வரலாற்று ஆராய்ச்சியாளர் பத்மஜா தேசாய் கூறியதாவது:
கிருஷ்ணா நதியில் கண்டெடுக்கப்பட்ட இச்சிலைகள், 11 வது நுாற்றாண்டில் கல்யாண சாளுக்கியா மன்னராட்சி காலத்தில் வடிவமைக்கப்பட்டது.
பஹாமனி சுல்தான் மற்றும் அதில் சாஹிஸ் இடையே ஏற்பட்ட மோதலால், இவர்களிடம் இருந்து காப்பாற்ற, சிலைகளை, கிருஷ்ணா நிதியில் வீசியிருக்கலாம். ராய்ச்சூரை பல மன்னர்கள் ஆண்டுள்ளனர். 163 போர்களை சந்தித்துள்ளன....
இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவ இடத்துக்கு வந்த இந்திய தொல்லியல் துறையினர், சிலைகளை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்...