திடீரென தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்.. கவிழ்ந்த 10 பெட்டிகள்.. 25 பேர் பலி.. பாகிஸ்தானில் சோகம்.இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். 80 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது கராச்சி. பல்வேறு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் இங்கு உள்ளன.இதனால், கராச்சியில் ரயில் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் எப்போதும் பயணிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். பாகிஸ்தானின் பிசியான ரயில் நிலையங்களில் ஒன்றாகவே இந்த ரயில் நிலையம் உள்ளது.
இந்த நிலையில், கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில், ஷஹசாத்பூர் மற்றும் நவப்ஷாஸ் இடையே உள்ள சஹரா ரயில் நிலையம் அருகே வந்த திடீரென்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன.அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த ரயில் திடீரென்று கவிழ்ந்ததில் பயணிகள் அலறினர். தடம் புரண வேகத்தில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு உருக்குலைந்தன.பாரிசாலன்
இந்த கோர விபத்தில் இதுவரை 25 பேர் பலியானதாகவும் சுமார் 80 பேர் படுகாயம் அடைந்ததகாவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் பலர் படுகாயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட மீட்கப்பட்டு அவசர அவசரமாக ஆம்புலன்சில் ஏற்றி செல்லப்படும் காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாகஉள்ளது. விபத்து குறித்து லாகூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரயில்வே துறை அமைச்சர் காவ்ஜா சத் ரஃபீக், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று உள்ளதாகவும் தெரிவித்தார். மெக்கானிக்கல் கோளாறு காரணமாக விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
