ஜப்பான்.. கடலில் கொத்து கொத்தாக கொட்டப்படும் அணு கழிவு நீர்..பெய்ஜிங்: புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கழிவு நீர் கடலில் வெளியிடப்பட உள்ளது. இதனால் அங்கு மூன்று ரியாக்டர்களில் மொத்தமாக கசிவு ஏற்பட்டது. அதோடு மூன்று ஹைட்ரஜன் வெடிப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20 கிமீ சுற்றுவட்டாரத்தில் இருந்த 154,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த விபத்தில் அணு பாதிப்பு ஏற்பட்டு நீர் மாசு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் அணு ஆயுத கசிவு ஏற்பட்ட தண்ணீர் பசிபிக் கடலில் கலந்ததும் குறிப்பிடத்தக்கது
என்ன நடந்தது? : சுனாமி காரணமாக விபத்துக்கு உள்ளாகி செயல் இழந்த புகுஷிமா அணு உலையில் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் உள்ளது. அங்கே உள்ளே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் அங்கே உள்ள சேமிப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2019 நிலவரப்படி, இந்த அணு ஆலை பகுதியில் 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான அணு மாசு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் காலம் முழுக்க இப்படி சேமிக்க முடியாது.இந்த நீரை கடலுக்கு வெளியேற்ற அனுமதிக்கும் அளவிற்கு இதை சுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ரேடியன்யூக்லைடுகளை அகற்றக்கூடிய ஒரு சுத்திகரிப்பு அமைப்பு மூலம் இந்த அணு மாசு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இந்த நீரில் இருக்கும் டிரிடியம் தவிர மற்ற அணு ஆயுத மாசுக்கள் சுத்திகரிக்கப்பட்டது. தற்போது நிலவரப்படி அங்கே இருக்கும் 80 சதவிகித நீர் சுத்திகரிக்கப்பட்டு உள்ளது . அங்கே 1000க்கும் அதிகமான பெரிய டேங்குகளில் நீர் நிரப்பப்பட்டு உள்ளது. இதைத்தான் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்த தண்ணீரை படிப்படியாக பசிபிக் பெருங்கடலில் விடுவிக்க விரும்புகிறது. இப்படி வெளியேற்றப்படுவதுதான் பாதுகாப்பானது என்று வலியுறுத்துகிறது

image