10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் - பள்ளிக்கல்வி துறை அதிரடி அறிவிப்பு
விருப்ப மொழிப்பாடத்தை தேர்வு செய்தவர்கள், அடுத்த கல்வி ஆண்டிலிருந்து ஒட்டுமொத்தமாக 6 பாடங்கள் அதாவது 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப மொழிப் பாடத்தை தேர்வு செய்வோர், கட்டாயம் 35 மதிப்பெண் பெற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.2006 ஆம் ஆண்டு கட்டாயம் தமிழ் படிக்கும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது.
தமிழைத் தாய் மொழியாக இல்லாத மாணவர்கள், தங்கள் மொழிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று விரும்பியதால், தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைத் தொடர்ந்து நான்காவது விருப்ப பாடமாகப் படிக்கலாம் என்றும், ஆனால் அதில் பெறக்கூடிய மதிப்பெண்கள் தேர்ச்சிக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, சிறுபான்மை மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளட்ட மொழிகளை மாணவர்கள் விருப்ப பாடங்களை அதிக அளவில் படித்து வருகின்றனர். எனினும் மதிப்பெண் பட்டியலில், அந்த பாடம் இடம் பெற்றாலும், தேர்ச்சி அல்லது தோல்வி என்று குறிப்பிடுவது இல்லை. வழக்கம்போல் தமிழ் உள்ளிட்ட ஐந்து பாடங்களுக்கான மதிப்பெண்கள் மட்டுமே தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வருகின்றன.