😺இளம் வயதிலே 1400 சிங்கங்களை வேட்டையாடிய அரசர்.. யார் இந்த பாரத்பூர் மகாராஜா?😺
👉 வேட்டையாடுவது பண்டைய காலத்தில் அரசர்களின் பொழுதுபோக்காக இருந்தது. ராஜா தனது நண்பர்கள், ஊழியர்களுடன் காட்டுக்கு வேட்டையாட செல்வார். சில சமயங்களில் பிற நாட்டு மன்னர்களுடன் இணைந்தும் வேட்டைக்கு செல்வார்.
👉 இது அந்த காலத்தில் ஒரு வீர விளையாட்டாக கருதப்பட்டது.இந்த நிகழ்வுகளெல்லாம் டொமினிக் லேவியர் மற்றும் லாரி காலின்ஸ் ஆகியோரின் “ஃரீடம் அட் மிட்நைட்” என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
👉 இந்த புத்தகத்தின் தகவலின் படி 1947-ல் இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை 20,000 ஆக இருந்ததுஆனால் அரசர்கள் விலங்குகளை வேட்டையாடுவதை வீரமாக கருதினர். அவர்களில் ஒருவர் தான் பாரத்பூர் மகாராஜா. அவர் தனது 8 வயதில் முதல் சிங்கத்தை கொன்றார்.
👉 பாரத்பூர் மகாராஜா தனது நண்பர்களை வேட்டைக்கு அழைத்துச் செல்வதை வழக்காக கொண்டிருந்தார். அப்போது வெள்ளி சீலிங்கினால் ஆன ரோல்ஸ் ராய்ஸ் காரில் தான் பயணம் செய்வாராம்.
👉 ஒருமுறை அவர் வைஸ்ராய் லார்ட் ஹார்டிங்கின் நினைவாக ஒரு வேட்டை திருவிழாவை ஏற்பாடு செய்தார். அவர் அங்கு 3 மணி நேரத்தில் சுமார் 4,482 பறவைகளை கொன்று வீழ்த்தினார்.
👉 பாரத்பூர் மகாராஜா வேல்ஸ் இளவரசர் மற்றும் ஏபிசி மவுண்ட்பேட்டனையும் கருஞ்சிறுத்தைகளை வேட்டையாட அழைத்தார். அவர் சிங்க வேட்டையை மிகுதியாக விரும்பினார். அதன் காரணமாக சுமார் 1,400-க்கும் மேற்பட்ட சிங்கங்களை வேட்டையாடி குவித்தார்.
இதேபோல மகாராஜா ராமானுஜ பிரதாப் தேவரும் வெட்டையில் சிறந்து விளங்கினார். இதனால் ஆயிரக்கணக்கான சிங்கங்களையும், சிறுத்தைகளையும் கொன்று குவித்தார்

image