Hi today we see about beauty tips 💅
முகம் பொலிவு பெற இயற்கை அழகு குறிப்புகள்.
முகம் பொலிவு பெற வழிகள்..
இந்த பதிவில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இயற்கையாக முகத்தை எப்படி? பொலிவாக வைத்துக்கொள்ளலாம் என்பதற்கான சில டிப்ஸ்களை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
செய்முறை: 1 – Glowing Skin Tips
1.Face Brightness Natural Tips: ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் (பால் பவுடர் இல்லையெனில் காய்ச்சாத பால் சேர்த்து கொள்ளலாம் ) சேர்த்து கலந்து கொள்ளவும். பின் அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
2.பின் அதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளவும். இப்போது முகத்தை கழுவி விட்டு பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்யவும்.
3.இரண்டு நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரினால் கழுவி விடவும். இதே போன்று தினசரி செய்து வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.
செய்முறை: 2 – Skin Glowing Tips
1.Face Shine Tips in Tamil: ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ளுங்கள்.
2. பின் இந்த பேஸ்டை முகத்தில் தடவி 1-2 நிமிடம் ஸ்கரப் செய்து விட்டு, முகத்தை நீரினால் கழுவவும். இந்த பேஸ்டை வாரத்தில் மூன்று நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி அழகான சருமத்தை பெறலாம்.
செய்முறை: 3 – Tips For Glowing Skin
1. ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு பவுடர் அல்லது உருளை கிழங்கு ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (எலுமிச்சை சாருக்கு பதிலாக அரிசி மாவு பயன்படுத்திக்கொள்ளலாம்), தேன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
2. இப்பொழுது இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்
3.இந்த பேஸ்டை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கி முகம் பொலிவாகவும், அழகாகவும் மாறிவிடும்.
