நிறுவனத்தின் மதிப்பு 300 கோடி... வெளிநாட்டில் கலக்கும் இந்திய ஆசிரியரின் வெற்றிக் கதை!வழக்கமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கும் பலரும் ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற பிரபலமான பிசினஸ் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால்…இன்றைய காலத்தில் நம் நாட்டுப் பெண்கள் வெளிநாடுகளிலும் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள்.

இதற்கு பலரை உதாரணமாக கூற முடியும். சிலர் தொழில் தொடங்குவதற்கு முன்பு அது சம்மந்தமாக பல்வேறு படிப்புகளை பிரசித்தி பெற்ற பல்கலைகழகத்திலிருந்து பெற்றிருப்பார்கள். ஆனால் நாம் இன்று பார்க்கப் போகும் நபரோ, பிரபலமான கல்லூரிகளில் படித்தால் தான் வளர் இளம் நிறுவனங்களை (ஸ்டார்ட்அப்) தொடங்க முடியும் என்ற மாய பிம்பத்தை தகர்த்தெறிந்தவர். சிங்கப்பூரில் லிட்டில் பேடிங்டன் (Little Paddington) என்ற பெயரில் வெற்றிகரமாக ப்ரீ ஸ்கூலை (preschool) நடத்தி வருகிறார் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா.அதுமட்டுமின்றி மூன்று வயது முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு கல்வி புகட்டுவதற்காக கிரியேட்டிவ் கலிலியோ என்ற பெயரில் பிரத்யேகமான கல்வி தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா. 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளிடத்தில் வாசிப்பு பயிற்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலி செயல்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் ஆசிரியராகவும் பணியாற்றி வந்த பிரேர்னா ஜூன்ஜூன்வாலா, இப்போதும் கூட தொழிற்சாலைகளில் உள்ள குழந்தைகளுக்காகவும் வகுப்புகள் எடுக்கிறார்.நியூயார்க் பல்கலைகழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்துள்ள பிரேர்னா ஜூன்ஜூன்வாலா, தனது நிறுவனத்தின் சார்பில் Little Singham மற்றும் Toondemy என்ற இரண்டு புதிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இதுவரை இந்த செயலிகளை ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர். இந்திய ப்ளே ஸ்டோரில் சிறந்த 20 செயலிகளின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே குழந்தைகள் கற்றல் செயலி இது மட்டுமே என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருள்கள் குழந்தைகளின் கற்றலுக்கு உதவி செய்யும் வகையில் விளையாட்டுகள் நிறைந்ததாகவும், விளக்க வீடியோக்கள் மற்றும் நம் கற்றல் அனுபவத்திற்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளும் வசதிகளையும் கொண்டுள்ளதாக கூறுகிறார் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா.வழக்கமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கும் பலரும் ஐஐடி, ஐஐஎம் மற்றும் பிற பிரபலமான பிசினஸ் கல்லூரிகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆனால் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா, நியூயார்க் பல்கலைகழகத்தில் பெற்ற பட்டப்படிப்பை தவிர்த்து, தொழில் கல்வி என்று எந்த முறையான பயிற்சியையும் பெறவில்லை. எனினும் தன்னுடைய விடா முயற்சி மற்றும் கடுமையான உழைப்பால், தனக்கு விருப்பமான துறையில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.இந்த நிறுவனங்களை தொடங்குவதற்கு முன்பு வரை எந்தவித முறையான தொழில் பயிற்சியோ அல்லது அனுபவமோ எதுவும் பிரேர்னா ஜூன்ஜூன்வாலாவிடம் கிடையாது. கடந்த வருடம் இவரது நிறுவனம் ரூ.60 கோடியை முதலீடாக ஈர்த்துள்ளது. 2023-ம் ஆண்டில் இவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே 40 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் இது ரூ.330 கோடியாகும்.

எதிர்காலத்தில் வேறு சில நாடுகளிலும் எங்கள் நிறுவனத்தை தொடங்க உள்ளதாகவும் எல்லாருக்கும் புரியும் வகையில் பேச்சு வழக்கிலும் கண்டெண்டுகளை கொடுக்க உள்ளோம் என்றும் நம்பிக்கையாக தெரிவிக்கிறார் பிரேர்னா ஜூன்ஜூன்வாலா.

image