கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. தற்போது பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை கணக்கிட்டுள்ள அதிகாரிகள், அடுத்து டெல்டா பாசனத்திற்கு சில கணக்கீடுகளை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஹைலைட்ஸ்:
கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 12,500 கன அடி நீர் வருகை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
காவிரி விவகாரம் மீண்டும் ஒருமுறை பஞ்சாயத்திற்கு வந்துள்ளது. தமிழகம் - கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் தண்ணீருக்காக மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளன. தற்போது தென்மேற்கு பருவமழை மூலம் நல்ல மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் 80 சதவீத அளவிற்கு நிரம்பியுள்ளன. இருப்பினும் தமிழகத்திற்கு தேவையான நீரை தருவதில் முரண்டு பிடித்து வருகிறது.
