HEADLINE NEWS:
தென்காசியில் இந்தியா வடிவில் நின்ற 760 பள்ளி மாணவர்கள்... வந்தே மாதரம் முழங்கி உலக சாதனை
சங்கரன்கோவிலில் 760 மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து இந்தியா வரைபடம் வடிவில் வந்தே மாதரம் பாடல் முழங்க செய்து ஜாக்கி புக் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் இடம்பெற்றுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் பொருட்டு 760 மாணவ, மாணவிகள் ஒருங்கிணைந்து இந்திய வரைபடம் வடிவில் நின்று கொடியசைத்து வந்தே மாதரம் முழங்க ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
நாட்டின் 77-வது சுதந்திர தின விழா அனைத்து பகுதிகளிலும் நேற்று கொண்டாடப்பட்டது. சங்கரன்கோவில் மைதானத்தில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 760 பேர் ஒருங்கிணைந்து இந்திய வரைபடம் வடிவில் நின்று வந்தே மாதரம் பாடலை முழங்க ஜாக்கி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இதற்காக தொடர்ந்து மூன்று நாட்களாக 760 மாணவ, மாணவிகள் பயிற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்திய வரைபட வடிவில் நின்று தங்கள் கைகளில் இருந்த கொடிகளை அசைத்து வந்தே மாதரம் பாடலை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாடி முழங்கினர். இந்த நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் பழனி செல்வம் வழி நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் ராஜேஷ் கண்ணா தலைமை தாங்கினார்.