HI WE SEE ABOUT INTERESTING SCIENCE FACTS .👀

1. வளரும் ஈஃபிள் கோபுரம்:
ஒவ்வொரு வருடமும் ஈஃபில் கோபுரமானது கோடை காலத்தில் 15 CM உயரம் வளரும். ஒரு பொருள் வெப்பமடையும் போது, ​​அதன் அணு துகள்கள் அதிகமாக நகரும் அப்பொது அளவில் சற்று பெரிதாக காணப்படும் – இது வெப்ப விரிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது. வெப்பநிலை குறையும்போது அது மீண்டும் சுருங்குகிறது. இது இரும்பு போன்ற திடப்பொருட்களிலும் ஏற்படுகிறது. இந்த காரணத்திற்னால்தான் பாலங்கள் மற்றும் பெரிய கட்டமைப்புகள் கூட அளவில் சற்று பெரிதாக காணப்பட வாய்ப்புள்ளது. இதே நிகழ்வுதான் ஈஃபிள் கோபுரத்திற்கும் நடக்கிறது.

2. நகரும் கண்டம்:
ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலியா கண்டமானது வடக்கு நோக்கி வேகமாக 7 சென்டிமீட்டர் நகர்ந்து வருகிறது இப்படியே இது நகர்ந்து வருவதால் இது கல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்காவின் மீது மோதும்.

3. உலகமே அழிந்தாலும் இறக்காத ஒரே இனம்:
இந்த உலகம் அழிந்தால் அனைத்தும் அழிந்துவிடும் என நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு டார்டிகிரேட் என்ற உயிரினம் எந்த ஒரு வெப்பநிலையிலும் , எந்த ஒரு இடத்திலும் விண்வெளியில் கூட உயிரினம் ஆகும். இது அளவில் மிக மிக சிறியது எனவே இது உயிர்பிழைத்து விடும்..

4. தேனீக்களின் சக்தி:
இந்த உலகில் உயரமாக பறக்கூடிய ஒரு உயிரினம் என்ன என்று கேட்டாம் நாம் அனைவரும் பறவையில் இனத்திலுள்ள கழுகு என்று கூறுவோம் ஆனால் ஒரு தேன்னீயால் எவரெஸ்டு சிகரத்தின் உச்சியை தாண்டி கூட பறக்க முடியும்.

5. அண்டார்டிகாவின் இரத்த ஆறு:
இதுவரை ஆறு என்றாலே ஒரு குறிப்பிட்ட வண்ணத்தில் மட்டும்தான் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம் ஆனால் அது பொய் என நிரூபிக்கும் வகையில் உள்ள ஒரு ஆறுதான் அண்டார்காவில் உள்ள இந்த இரத்த(blood falls) ஆறு, இந்த ஆறு உண்மையில் இரத்த ஆறுதானா,இதற்கு பின்னால் இருக்கும் இரகசியம் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
இரத்த ஆற்றின் பிண்ணனி-blood falls explanation

இந்த இரத்த ஆறானது 1911-ஆம் ஆண்டு தாமஸ் கிரிஃபித் டெய்லர் என்பவரால் கண்டுபிடிக்கபட்டது அன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் இந்த ஆறு கண்டுபிடிக்கபட்டதால் இந்த சிகப்பு நிறத்திற்கான காரணத்தை கண்டறிய பல காலங்கள் ஆகின.

அதுவரை இந்த சிகப்பு நிறத்திற்கான காரணம் நீரில் இருக்கூடிய சிகப்பு பாசிகள் என நம்பபட்டது. இந்த ஆறுக்கான முக்கிய காரணமாக குறிப்பிடுவது பனிக்கு அடியில் 2 மில்லியன் ஆண்டுகளாக ஒரு ஓடையாக இருந்துள்ளது.

அப்பொழுது இந்த ஓடையில் மட்டும் கிட்டதட்ட 17 வகையான நுண்ணுயிர்கள் இருந்துள்ளன இவை அனைத்தம் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படி பனிக்கு அடியில் உயிர்வாழ்ந்த நுண்ணுயிர்களில் இருந்து சல்பர் மற்றும் இரும்பு போன்றவை வெளிவந்துள்ளது. இந்த இரும்பு மற்றும் சல்பர் பனிக்கு அடியில் இருந்து மேலே வரும்போது ஆக்ஸிஜனுடன் வேதிவினைக்கு உள்ளாக்கபட்டு சிகப்பு நிறமாக மாறி இரத்த ஆறாக நம் கண்களுக்கு தோற்றமளிக்கிறது.எனவே இந்த உலகில் நடக்கும் அனைத்து விசயங்களுக்கு பின்னாலும் அறிவியல் உள்ளது ஒரு சிலவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருசிலவற்றை நம்மால் புரிந்துகொள்ளமுடியாமல் உள்ளோம் இதுதான் இயற்கையின் சிறப்பு.

image
image
image