தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது இவ்ளோ ஈஸியா? உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்து விஜய் கொடுத்த விளக்கம்
உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ள விஜய், அதில் முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னோட பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய வாருங்கள்.
நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியின் உறுதிமொழியை படியுங்கள். உங்கள் எல்லாருக்கும் பிடித்திருந்தால், உடனே ஜாயின் பண்ணுங்க. ப்ளீஸ். ஈஸியாக உபயோகிக்கும் வகையில் தான் இந்த செயலி உள்ளது என விஜய் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

image