TikTok Challenge-ஆல் உயிரிழந்த 11 வயது சிறுவன்; மாரடைப்பால் ஏற்பட்டது ஏன்? நடந்தது என்ன?
டிக்டாக்கில் டிரெண்டான chroming challenge ஐ செய்த 11 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குரோமிங் சேலஜ் எனப்படுவது, வீட்டில் உள்ள தின்னர், வார்ணிஷ், நெயில் பாலிஷ், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களை நுகர்ந்து பார்ப்பது. 'ஹஃபிங்' என்றும் அழைக்கப்படும் குரோமிங், நச்சுப் பொருட்களிலிருந்து வரும் புகையை உள்ளிழுப்பதை குறிக்கிறது. இந்த நச்சு ரசாயனங்களை உள்ளிழுப்பது நரம்பு மண்டலத்தை பாதித்து பேச்சு மந்தம், தலைச்சுற்றல் மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

இப்படியான குரோமிங் சேலஜை செய்துள்ளார் இச்சிறுவன். இதன்பிறகு சிறுவன் மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது அவரின் குடும்பத்திலும், அப்பகுதியிலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.