TODAY HEADLINE NEWS
சந்திரயான் 3 விண்கலம் நிலவை நெருங்கி உள்ள நிலையில் இனி வரும் ஒவ்வொரு நொடியையும் முக்கியமானதாக பார்க்கிறது இஸ்ரோ. இந்நிலையில் சந்திரயான்-3
சந்திரயான் 3 விண்கலம் நிலவிற்கு மிக நெருக்கமாக உள்ள நிலையில் அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் பிரிப்பு:
நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த சந்திரயான் 3 விண்கலத்தின் தொலைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி கடந்த 17ஆம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ ஷேர் செய்தது. இதனை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ தனது டிவிட்டரில், இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் நடவடிக்கையானது எல்எம் சுற்றுப்பாதையை 25 கி.மீ. x 134 கி.மீ.க்கு வெற்றிகரமாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும் என்றும் இறங்கும் பணி ஆகஸ்ட் 23, 2023 அன்று, சுமார் 17.45 மணி நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திரயான் 3 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டதில் இருந்தே தீவிரமாக கண்காணிக்கப்பட்ட வருகிறது.
விக்ரம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில் உள்ளது. முழு ஆரோக்கியத்துடன் அதே திறனுடனும் உள்ள விக்ரம் லேண்டர் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் நிலவின் மிக அருகில் சென்றுதான் தோல்வியை தழுவியது. நிலவில் வேகமாக தரையிறங்கியதால் விக்ரம் லேண்டர் சேதமடைந்தது.
ஆனால் இம்முறை அந்த மாதிரியான தவறு நடக்காமல் இருக்க விக்ரம் லேண்டரின் ஒவ்வொரு நகர்வையும் இஸ்ரோ தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. குறிப்பாக விக்ரம் லேண்டரின் கால்கள் கடந்த முறையை காட்டிலும் இம்முறை வலிமையாகயும் சுறுங்கி விரியும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும். அதன் பிறகு அதில் உள்ள ரோவர் தரையிறங்கு தனது பணியை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

image
image
image