விநாயகர் சதுர்த்தி... 3 நாட்கள் விடுமுறை... சொந்த ஊர் செல்பவர்களுக்கு குட் நியூஸ்!
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சொந்த ஊர் செல்லும் மக்கள் சிரமம் இன்றி திரும்பவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வார இறுதியான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் கொண்டாடப்படவுள்ளது.
மொத்தம் 1250 பேருந்துகள்
கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன. அதன்படி மொத்தம் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சொந்த ஊர் செல்லும் மக்கள் திரும்புவதற்கு வசதியாக வரும் 18 மற்றும் 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
