எப்படி சார் வேலை முடிஞ்சிருமா? சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் சொன்ன வார்த்தை... ஸ்டாலின் ஆய்வில் நடந்த சுவாரஸியம்!

சென்னையில் சாலை பணிகளை நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது, பொதுமக்கள் அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது செய்தியாளர்களும் கேள்விகளை எழுப்பினர். அதற்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் அளித்த பதில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.

ஹைலைட்ஸ்:

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
பருவமழைக்கு முன்பாக சாலை பணிகளை முடிக்க தீவிர ஏற்பாடு
தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் சொன்ன விஷயம்

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில வாரங்கள் தான் இருக்கின்றன. இதுதான் தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவை வாரி வழங்கப் போகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெளுத்து வாங்கி விடும். குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தீர்வாக அமைந்தாலும் சேதங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதாவது, சாலைகள் சேதமடைகின்றன.

மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

இன்றைய தினம் சென்னை மடிப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட ராம்நகருக்கு சென்றிருந்தார். அவருடன் அமைச்சர்கள், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ராம்நகர் 3வது பிரதான சாலையில் நடந்து வரும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தார்.

image