காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு... 1 முதல் 5ஆம் வகுப்பு வரை... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
தமிழகத்தில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது. வரும் 27ஆம் தேதியுடன் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிந்து விடுகின்றன. அதன்பிறகு காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும். இந்நிலையில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், 27.09.2023 வரை முதல் பருவத் தேர்வுகள் நடைபெறுகின்றன.
ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை
பள்ளிக் கல்வித்துறையின் 2023-34 கல்வியாண்டு நாட்காட்டியின் படி இரண்டாம் பருவத்திற்கு வரும் அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 8 வரை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
