சென்னை-திருப்பதி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! 15 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து..!
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் நடைபெறவுள்ள தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வரும் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரேணிகுண்டா தண்டவாள பராமரிப்பு பணிகள்:
அந்த வகையில் சென்னை-ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில்வே (யார்டில்) தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் வரும் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 12 தேதி வரை சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
