ஒரே நாளில் 7 பதக்கங்கள்: ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் பதக்க வேட்டை நடத்திய இந்தியாபாய்மர படகுப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தார்.ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இந்தியா ஒரே நாளில் 2 தங்கம் உட்பட 7 பதக்கத்தை வேட்டையாடியுள்ளது.சீனாவின் ஹாங்சோ நகரில் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிப் போட்டிகள் களைகட்டி வருகின்றன. நான்காவது நாளில் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனைகள் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்தனர். மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மனுபக்கர், ஈஷா சிங், சங்வான் ரித்தம் அடங்கிய இந்திய அணி 1,759 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்தை வென்றது.வெள்ளி வென்ற ஈஷா சிங்
மகளிர் 25மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் ஈஷா சிங் 34 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
