காஷ்மீர் டூ கன்னியாகுமரி... ஒன்றரை லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலை... டிசம்பர் வரை தான் டைம்!
ஹைலைட்ஸ்:

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பள்ளங்களால் விபத்துகள்
சரிசெய்யும் பணியை பொறியாளர்கள் கைகளில் ஒப்படைக்க திட்டம்
வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயம்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் வழியாக வளைந்து நெழிந்து தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இவற்றின் மொத்த தூரம் என்று கணக்கிட்டால் 1.46 லட்சம் கிலோமீட்டர் எனச் சொல்லலாம். அதேசமயம் புதிய சாலை வசதிகளால் தூரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் பள்ளங்களால் பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

image