ச்சே.. இவ்ளோ நாளா இதெல்லாம் தெரியாமல் இருந்திருக்கே.. நாம் அறிந்திராத சில சுவாரசிய உண்மைகள்
சென்னை: நம் கண் முன்னே தினமும் தென்படும் பல உயிரினங்களைப் பற்றியும் ஏன் நம்மைப் பற்றியும் கூட சில விசித்திரமான உண்மைகளை நாம் அறிந்து கொள்ளாமல்தான் இருக்கிறோம்.. சின்ன சின்ன விஷயங்களாகவே இருந்தாலும் அதைப் பற்றி நாம் யோசித்து இருக்க மாட்டோம். அவ்வாறான சில சுவாரசிய தகவல்ளைத்தான் இங்கே பார்க்க போகிறோம். பரந்து விரிந்த இந்த உலகில் நாம் அறிந்த விஷயங்கள் மிக சொற்பம் தான். அறிந்திடாத பல உண்மைகள் கடல் போல் உள்ளன. அதற்காக கடலில்தான் நாம் கேள்வியே படாத பல விஷயங்களும் இருக்கிறதே இதில் என்ன வியப்பதற்கு என்று
நினைத்து விடாதீர்கள்..
நமக்கு மிகவும் பரிட்ச்யமான சில உயிரினங்கள் மற்றும் நம்மை பற்றியும் சில சுவாரசியமான உண்மைகளைத் தான் நாம் இங்கே கண இருக்கிறோம். சுறு சுறுப்புக்கு உதாரணம் காட்டப்படும் எறும்புகள் எப்போது ஓய்வு எடுக்கும் என்று நினைத்து இருக்கிறீர்களா? ஆம் ஏறும்புகள் கூட ஓய்வு எடுக்குமாம். அதாவது 12 மணி நேரத்தில் சுமார் 8 நிமிடங்கள் வரை எறும்புகள் ஓய்வு எடுக்குமாம்