கேரளாவில் பள்ளிகளுக்கு விடுமுறை... தொடர் கனமழை, வெள்ளப்பெருக்கால் நடவடிக்கைகேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
லட்ச தீவு முதல் தமிழகத்தின் தென் பகுதிகள் வரை நீடித்த வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுபத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், காசர்கோட், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையால் திருவனந்தபுரத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் ரப்பர் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அரபிக் கடலில் உருவானது புதிய காற்றழுத்தம்... வங்கக்கடலிலும் உருவாகும் தாறுமாறு சம்பவம்... வானிலை மையம் எச்சரிக்கை!
