சென்னையை அடுத்த நாவலூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் கிடையாது..
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி:
சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 பணிகள் நடந்து வருவதால், பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள நாவலூரில் அமைந்திருக்கும் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவது இன்று முதல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
சென்னையை அடுத்த ராஜீவ் காந்தி சாலை மெட்ரோ ரயில் பணி தொடங்கியதை தொடர்ந்து, நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, இதை அகற்ற வேண்டும் என்று ராஜீவ் காந்தி சாலையை ஒட்டியுள்ள மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதாவது, குறுகலாக மாறி, தரமில்லாத சாலைக்கு அரசு தரப்பில் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம் என்பதே வாகன ஓட்டிகளின் கேள்வியாக இருந்தது.