அரபிக்கடலில் உருவானது தேஜ் புயல்.. அதி தீவிர புயலாக வலுப்பெறும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!தென்மேற்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நாளை அதிதீவிர புயலாக தீவிரம் அடையும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் நாளை அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.அரபிக்கடலில் கடந்த 19ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்தது. நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.