23 ஆண்டு பழமை! சென்னையில் இரு முக்கிய மேம்பாலங்களை இடிக்க முடிவு? அப்போ போக்குவரத்து என்னவாகும்?
சென்னை: சென்னையில் முக்கிய இரு மேம்பாலங்கள் இடிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையில் விமான நிலையம்- விம்கோ நகர், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய இரு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த மெட்ரோ ரயில்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ரூ 63,246 கோடியில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெறுகிறது.
இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26 கிலோமீட்டர் தொலைவுக்கும் மாதவரம்- சிறுச்சேரி சிப்காட் வரை 45 கி.மீ. வரைக்கும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கும் என 118 கி.மீ தூரத்திற்கு புதிய வழித்தடங்கள் அமையவுள்ளன.
