5 முதல் 11ஆம் வகுப்பு வரை... அரசு பள்ளிகளில் புதிய சிக்கல்... ஒர்க் ஷீட் எங்கே? எக்ஸாம் வந்துடுச்சு!

நடப்பு கல்வியாண்டின் இரண்டாம் பாதிக்கான கற்றல் மீட்பு திட்டத்திற்கான ஒர்க் ஷீட்கள் அரசு பள்ளிகளுக்கு இன்னும் போய் சேரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் 5 முதல் 11ஆம் வகுப்பு வரை தேர்வுகள் தொடர்பான அறிவிப்பை அம்மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எதன் காரணமாக ஒர்க் ஷீட்கள் தாமதமாகி உள்ளன? பள்ளிகளுக்கு எப்போது கிடைக்கும்? உள்ளிட்ட தகவல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்யும் வகையில் அரசு கொண்டு வந்த திட்டம் தான் கலிகா பாலவர்தனே (Kalika Balavardhane). இதனை கற்றல் மீட்பு சிறப்பு நடவடிக்கை என்று அழைக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதை பார்க்கலாம். ஒவ்வொரு அரையாண்டிலும் மாணவர்களின் கற்றல் எப்படி இருக்கின்றன? என்பதை உறுதி செய்யும் வகையில் ஆக்டிவிட்டி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

image