சந்திர கிரகணம் 2023 எப்போது, எங்கு தெரியும்? எப்படி பார்க்கலாம்? வெளியான முழு விவரம்!

2023ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ்ந்த இரண்டு வாரங்களில் இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திர கிரகணத்தை எங்கு எப்போது பார்க்கலாம் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 14 அன்று ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28-29 (சனி-ஞாயிறு) அன்று நடைபெறும்.

சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுக்கிறது. இதுவே சந்திர கிரகணம் எனப்படுகிறது.

முழு நிலவு எனப்படும் பௌர்ணமி நாளின்போது, சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. அப்போது சந்திரனின் ஒருபகுதி இருட்டாக காணப்படும். அந்த சமயம் பூமியில் இருந்து நாம் சந்திரனை பார்க்கும்போது, பூமியின் நிழல் விழுந்து சந்திரனின் மறைக்கப்பட்ட பகுதி மட்டும் இருட்டாக தெரியும். இதுவே சந்திர கிரகணம் ஆகும்.
சூரிய கிரகணத்தை தொலைநோக்கி உதவியுடன் தான் பார்க்க முடியும். ஆனால் சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். அக்டோபர் 28ஆம் தேதி 15 மணிக்கு துவங்கி 2:24 மணிக்கு முடியும். கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் இருக்கும். நாசாவின் அறிக்கையின் படி இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை பார்க்க முடியும்.

image