என்.வி.எஸ் 01 செயற்கைக்கோள் உடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி எப் 12 ராக்கெட்!
முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எப் 12 ராக்கெட் இன்று காலை என்.வி.எஸ் 01 ராக்கெட் உடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இது ஒவ்வொரு படிநிலையாக பிரிந்து சென்று புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எப் 12 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. தரை வழி போக்குவரத்து, நீர் வழி போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவற்றில் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படவுள்ளது.
