ரூ.3,100 கோடியில் மின் வழித்தடங்கள்...
சென்னை,- தமிழக மின் வாரியம், இந்த நிதியாண்டில், 3,136 கோடி ரூபாய் செலவில், புதிய துணைமின் நிலையங்கள்...மின் வழித்தடங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. ...
அதன்படி, தலா, 400 கிலோ வோல்ட் திறனில் இரண்டு; 230/ 110 கி.வோ., திறனில் இரண்டு; 110/ 33 கி.வோ., திறனில், 20 துணைமின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களில், சூரியசக்தி மின் நிலையங்கள் அதிகம் அமைக்கப்பட்டு வருவதால், சிவகங்கை, துாத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில், துணைமின் நிலையங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது....
