கேஸ் சிலிண்டர் விலை விடுங்க.. சென்னையில் குபீர்னு ஏறிய அரிசி விலை.. கலங்கும் தமிழ்நாடு.. இதுவா காரணம்

சென்னை: திடீரென தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளது.. பருவமழை தொடங்கியிருக்கிறது என்றாலும், இந்த அரிசி விலை உயர்வால், ஏழை, எளிய மக்கள் வெகுவாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
அரிசியின் விலை, 2 மாதங்களுக்கு முன்பே உயர்ந்துவிட்டது.. இந்த விலை உயர்வுக்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டன.. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பருமழை குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்..
இயற்கை சீற்றம்:
மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதுதான் காரணம் என்றார்கள்.. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை, 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதுதான், இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றும் சொன்னார்கள்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதனாலேயே அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துவிட்டதாகவும் தஞ்சை, நாகை மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் காரணம் தெரிவித்தார்கள்.. எனினும், காவிரி நீர் பற்றாக்குறைதான் இதற்கெல்லாம் பிரதான காரணம் என்று குமுறி தீர்த்துவிட்டார்கள் டெல்டா விவசாயிகள்..