இண்டர்நெட்டை தெறிக்கவிட்ட 13 வயது சிறுவன்.. அடேய் பொடியா நீ பாஸ்-ஆ.. அதிர்ச்சி அடைந்த டீச்சர்..!

இந்த 2K கிட்ஸ்-ஐ பல வகையில் விமர்சனம் செய்தாலும் அனைவரும் கெட்டிக்கார பிள்ளைகள் என்றால் மிகையில்லை. இதை நிரூபணம் செய்யும் வகையில் வெறும் 13 வயது சிறுவன் இன்று இண்டர்நெட் உலகையே அசத்தி வருவது மட்டும் அல்லாமல் பல சிறுவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளார்.
சீனாவில் 13 வயது சிறுவன், தான் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை நடத்துவதாக தனது ஆசிரியரிடம் கூறும் வீடியோ சீன சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிறுவன் தனது நிறுவனத்தில் 5 முதல் 6 பணியாளர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு தான் சம்பளம் வழங்குவதாகவும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
பாய் என்ற புனைபெயர் கொண்ட பள்ளி ஆசிரியை ஒருவர் சீனாவின் டிக்டாக்-ன் சீன வெர்ஷனாக இருக்கும் Doujin தளத்தில் வெளியிட்ட வீடியோ தான் இன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
சீனாவின் தென்மேற்கு பகுதியான Chongqing அரசு பள்ளியில் ஆசிரியை தான் இந்த பாய் என பெயர் கொண்ட டீச்சர். இவர் தனது வகுப்பு மாணவர்களிடம், உங்கள் வகுப்பில் சாதித்தவராகவும் வெற்றிகரமானவராகவும் கருதும் ஒருவரை பற்றிய கட்டுரை எழுத சொல்லியுள்ளார்
இதற்கு வகுப்பில் பெரும்பாலான மாணவர்கள் ஒருவரையே தேர்வு செய்து, அந்த மாணவர் ஒரு நிறுவனத்தின் முதலாளி என்றும், இப்போதே அவனிடம் பலரும் வேலைவாய்ப்பு கேட்பதாக எழுதியுள்ளனர்.
இதில் வியப்படைந்த பாய் டீச்சர் போன்-ஐ எடுத்து வீடியோ எடுக்க துவங்கனார்.பாய் தனது வகுப்பு மாணவர்களிடம், "உங்களில் ஒருவன் கம்பெனி வைத்திருக்கும் முதலாளி என்று கேள்விப்பட்டேன். யார் அது?"எல்லோரும் முகமூடி அணிந்த ஒரு டீனேஜ் பையனை நோக்கி திரும்பினர்
. "நீங்கள் தான், பாஸ் சென்-ஆ" என்று வீடியோவில் ஆசிரியர் கேட்டு, "உங்கள் நிறுவனம் என்ன வகையான வணிகத்தில் ஈடுபட்டுள்ளது?" என்று கேட்க அதற்கு சிறுவன் தன்னுடைய நிறுவனம் "இன்டர்நெட் டெக்னாலஜி" நிறுவனமாக இருப்பதாகவும், ஐந்து முதல் ஆறு பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

image