சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பான செய்தி: தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு இனி விசா தேவையில்லை

அண்டை நாடான இலங்கையும், சில தினங்களுக்கு முன்பு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , திரைத்துறையினர் பலரும் தங்கள் படஷூட்டிங்கிற்காக தாய்லாந்துக்கு படையெடுக்கின்றனர். இந்த நிலையில் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியர்கள் அடுத்த 7 மாதங்கள் விசா இல்லாமல் தாய்லாந்து வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் வரை இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க முடியும்.

சீசன் நெருங்கி வருவதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா போன்று, தைவானில் இருந்து தாய்லாந்து செல்பவர்களுக்கும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையும் இந்தியர்கள் வருவதற்கு விசா தேவையில்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

image