மதுரை டூ திருப்பதி.. விமான சேவை.. அதுவும் தினமும்... பயணிகள் மகிழ்ச்சி!

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் திருப்பதிக்கு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன. திருப்பதிக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது ஊர் அறிந்த ஒன்று. இதனால் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை உள்ளது.

இதேபோல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் திருப்பதிக்கு ரயில் சேவை மற்றும் விமான சேவைகளும் உள்ளன. பயணிகள் தங்களின் வசதிக்கு ஏற்ப ரயில் மற்றும் விமான சேவைகளை பயன்படுத்தி திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். சென்னையில் இருந்து பேருந்து, ரயில் மற்றும் விமானம் ஆகிய மூன்று சேவைகளும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரையில் இருந்தும் திருப்பதிக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. விமான நிறுவனங்கள் மதுரை விமான நிலையத்தில் இருந்த மும்பை, சென்னை மற்றும் திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க விண்ணப்பித்துள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட அட்டவணையின்படி மதுரையில் இருந்து மும்பைக்கு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை மும்பைக்கு தலா ஒரு விமானத்தை இயக்கி வருகின்றன. மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்க ஏர் ஏசியா நிறுவனம் இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதேபோல் மதுரையில் இருந்து திருப்பதிக்கு தினசரி விமானத்தை இயக்க இண்டிகோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

image