சுற்றி வளைத்து தாக்கும் இஸ்ரேல்- அழிவின் பிடியில் காஸா
இஸ்ரேல் நடத்திய தாக்குலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது. இதில், 3,826 பேர் குழந்தைகள். 32,500 பேர் வரை காயமடைந்துள்ளனர்’ - பாலஸ்தீன் சுகாதாரத்துறை. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்.
வன்மத்தை கக்கும் இஸ்ரேல்... இதெல்லாம் அடுக்குமா?வஞ்சிக்கப்படும் பாலஸ்தீனர்கள்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் கோர போரில் அவ்வப்போது, இஸ்ரேலியர்கள் வன்மத்தை கக்கும் விதமாக வீடியோக்களை எடுத்து அவற்றை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி தொடங்கிய போர், இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், காஸாவில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.