கலர் கலராக தீபாவளி ஸ்வீட்ஸ்.. உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பகீர் வார்னிங்.. கேன்சர் பாதிப்பா?
தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி அனைத்து கடைகளிலும் கலர் கலராக ஸ்வீட்டுகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக பகீர் எச்சரிக்கையை விடுத்துள்ளார். பார்ப்பவர்களை சுண்டி இழுப்பதற்காக தயார் செய்யப்படும் இந்த ஸ்வீட்டுகளை எப்படி தயார் செய்ய வேண்டும்; இந்த இனிப்புகளால் ஏற்படும்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 12-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், இனிப்பு வகைகளும் தான். என்றைக்காவது ஒரு நாள் தானே சாப்பிடுகிறோம் என்று குழந்தைகளுடன் போட்டிப்போட்டு கொண்டு பெரியவர்களும் அன்றைக்கு டஜன் கணக்கிலான ஸ்வீட்டுகளையும்,
பலகாரங்களையும் வயிற்றில் அடைத்து விடுவார்கள். அதிலும் கண்ணை பறிக்கும் கலர் கலரான ஸ்வீட்டுகளை நமது கைகள் முதலில் எடுக்கும்.
உயிருக்கே உலை!
ஒரு கிலோ இனிப்பு எந்த அளவுக்கு நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும்; எப்படிப்பட்ட நிறமூட்டிகளை சேர்க்க வேண்டும்; பொதுவாக எந்தெந்த இனிப்பு வகைகளை எத்தனை நாட்களுக்கு வைத்திருக்கலாம் போன்றவற்றை சொல்லிக் கொடுத்து பயிற்சி அளித்திருக்கிறோம்.
ஒருவேளை, மக்களுக்கு தாங்கள் வாங்கும் கடைகளில் உள்ள ஸ்வீட்களில் அதிக நிறம் இருப்பதாகவோ அல்லது பழைய ஸ்வீட்டுகளை விற்றாலோ 94440 42322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் கொடுக்கலாம். முடிந்தால் அந்த ஸ்வீட்டுகளின் போட்டோக்களை போடலாம்.
